டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்காக 960 ரயில் பெட்டிகளை ரயில்வேத்துறை நிறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், தடுப்புப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதாரத்துறைக்கு உதவியாக ரயில்வேத்துறையும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட ரயில் பெட்டிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் கழிவறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், நோயாளிகளுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 5,231 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் ஆனந்தவிஹார், சஃப்தர்ஜங் உள்பட 9 ரயில் நிலையங்களில் 503 கொரோனா சிகிச்சை மைய ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் லக்னோ, வாரணாசி உள்பட 23 ரயில் நிலையங்களில் 372 பெட்டிகளும், மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் 5, ஆந்திராவின் விஜயவாடாவில் 20, தெலங்கானாவில் செகந்தரபாத் உள்பட 3 நிலையங்களில் 60 ரயில் பெட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு இடத்திலும் 2 அதிகாரிகளையும் ரயில்வேத்துறை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. PalsuvaiDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Palsuvai. Publisher: News7 Tamil டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்காக 960 ரயில் பெட்டிகளை ரயில்வேத்துறை நிறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், தடுப்புப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதாரத்துறைக்கு உதவியாக ரயில்வேத்துறையும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட ரயில் பெட்டிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் கழிவறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், நோயாளிகளுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 5,231 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் ஆனந்தவிஹார், சஃப்தர்ஜங் உள்பட 9 ரயில் நிலையங்களில் 503 கொரோனா சிகிச்சை மைய ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் லக்னோ, வாரணாசி உள்பட 23 ரயில் நிலையங்களில் 372 பெட்டிகளும், மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் 5, ஆந்திராவின் விஜயவாடாவில் 20, தெலங்கானாவில் செகந்தரபாத் உள்பட 3 நிலையங்களில் 60 ரயில் பெட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு இடத்திலும் 2 அதிகாரிகளையும் ரயில்வேத்துறை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.