திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் குப்பை வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்களை தனிமனித இடைவெளியின்றி ஏற்றிச் செல்லும் அவலம் காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,168 ஆக உயர்வு கண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி 1,500க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு…